மதுபாக்கெட்டுகள் விற்றவர் கைது
மதுபாக்கெட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை அருகே உள்ள ரெட்டியூர் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகளும், சாராயமும் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு கர்நாடகா மாநில மதுபாக்கெட்டுகள் 100, 5 லிட்டர் சாராயத்தை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சேட்டு (வயது 39) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த மது பாக்கெட்டுகள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story