கடையில் பணம் திருடியவர் கைது


கடையில் பணம் திருடியவர் கைது
x

பேன்சி கடையில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் கல்லத்திமுக்கு தெருவை சேர்ந்தவர் கல்யாண சிங் (வயது 35) டவுன் அம்மன் சன்னதி அருகே பேன்சி கடை வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்யாண சிங் கடையில் இல்லாத நேரம் பார்த்து மர்மநபர் ஒருவர் கடைக்குள் சென்று ரூ.1,500-ஐ திருடி சென்றுள்ளார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்த கதிரேசன் (23) பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story