தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயிலில் அடிபட்டு சாவு
குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
ஜோலார்பேட்டை
குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே வளத்தூர் இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்
அப்போது அந்த வழியாக ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் மாநிறம் உடையவர், வெள்ளை கலரில் கருப்பு கோடு போட்டு அரை கை சட்டையும், நீல நிற பேண்ட்டும் அணிந்து உள்ளார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை.
நேற்று இரவு அப்பகுதியில் நடைபெற்ற திருவிழா பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பும் போது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.