2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது


2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
x

கஞ்சா கடத்தல் வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் காரில் கஞ்சா கடத்தி சென்றது. இதையறிந்த போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அங்கு சென்று கஞ்சா கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனால் கஞ்சா கடத்தலில் முக்கிய நபராக திகழ்ந்த ஒட்டன்சத்திரம் தாலுகா கண்ணனூரை சேர்ந்த சசிக்குமார் (வயது 45) என்பவர் தப்பிவிட்டார். இவர், கடந்த 2 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இதனால் போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசிர்பாத்திமா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் வெளியூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்த அவரை, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.


Next Story