புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
ஸ்ரீவைகுண்டத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) அருள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அனந்த முத்துராமன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்குளம் பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஸ்ரீவைகுண்டம் சன்னதி தெருவை சேர்ந்த சேது பாண்டியன் மகன் சிவமூர்த்தி (வயது 30) என்பதும், அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் சிவமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.12ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.