தியாகி அண்ணல் தங்கோ சிலை அமைப்பதற்கான இடம்


தியாகி அண்ணல் தங்கோ சிலை அமைப்பதற்கான இடம்
x

குடியாத்தத்தில் தியாகி அண்ணல் தங்கோ சிலை அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வேலூர்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த தியாகி அண்ணன் தங்கோ தமிழ்மொழி மீது தீராத பற்று கொண்டு வடமொழிப் பெயர்களை தமிழ்படுத்தியும், கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம், சைமன் குழு எதிர்ப்பு, உப்பு சத்தியாகிரகம், மற்றும் நீல் சிலை சத்தியாகிரகம் ஆகிய போராட்டங்கள் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.

அவருக்கு குடியாத்தத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவச் சிலை அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குடியாத்தத்தில் தியாகி அண்ணல் தங்கோ சிலை வைப்பதற்கான இடத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் இன்று ஆய்வு செய்தார்.

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில், காமராஜர் பாலம் அருகில் உள்ள நேரு பூங்கா மற்றும் மேல்பட்டி ரோட்டில் உள்ள அய்யாசாமி தெரு ஆகிய பகுதிகளில் சிலை வைப்பதற்கு ஏதுவான இடங்கள் குறித்து கலெக்டர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அமலுவிஜயன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் வெங்கடராமன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, நகரமன்ற உறுப்பினர் நவீன்சங்கர் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story