கவுந்தப்பாடியில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி திடீரென வெடித்ததால் பரபரப்பு


கவுந்தப்பாடியில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி திடீரென வெடித்ததால் பரபரப்பு
x

கவுந்தப்பாடியில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி திடீரென வெடித்ததால் பரபரப்பு

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே உள்ள காந்திபுரம் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 20 லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கவுந்தப்பாடி கடைவீதி மற்றும் காந்திபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த குடிநீர் தொட்டியில் இருந்து அதிக அளவில் குடிநீரை விலைக்கு வாங்கி சென்று பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் கோடை வெப்பத்தினால் இந்த பிளாஸ்டிக் தொட்டி திடீரென டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறி கீழே விழுந்தது. இதில் பிளாஸ்டிக் தொட்டியில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. திடீரென டமார் என்ற சத்தம் கேட்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அச்சம் அடைந்து தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது பிளாஸ்டிக் தொட்டி வெடித்து சிதறி உள்ளது என்பதை அறிந்ததும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடைந்த கிடந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பார்வையிட்டார். பின்னர் அங்கு புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் தெரிவித்தார்.

அப்போது கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் பாவா தங்கமணி, துணைத்தலைவர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், மாவட்ட துணைச்செயலாளர் வாசு, மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் விவேகானந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story