விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்


விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்
x

நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் தில்லை நாகராஜன். இவர் தற்போது சென்னையில் உள்ளார். இவரது காரை போலீஸ்காரர் உத்தமராஜன் என்பவர் நேற்று மதியம் ஓட்டி சென்றார். நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் சென்றபோது, மகாராஜநகரை சோ்ந்த ஒருவர் ஓட்டிவந்த மற்றொரு கார், அந்த போலீஸ் கார் மீது மோதியது. இதில் போலீஸ் கார் சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனையடுத்து ரோட்டில் கவிழ்ந்து கிடந்த காரை போலீசார் மீட்டு, போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story