ஆலங்குளம் அருகே போலீஸ் ஏட்டு விபத்தில் பலி
ஆலங்குளம் அருகே, விபத்தில் போலீஸ் ஏட்டு இறந்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே, விபத்தில் போலீஸ் ஏட்டு இறந்தார்.
போலீஸ் ஏட்டு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 48). இவர் நெல்லை தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் ஆலங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். நல்லூர் விலக்கு அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.
சாவு
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.