கழிவுநீர் வாய்க்காலின் நடுவே மின்கம்பம்
தேவதானப்பட்டி அருகே கழிவுநீர் வாய்க்காலின் நடுவே அமைந்த மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேனி
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது, நல்லகருப்பன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வடக்குத்தெருவில் கடந்த வாரம் பேவர் பிளாக் கற்கள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. அந்த தெருவில் ஏற்கனவே மின்கம்பம் உள்ளது. கழிவுநீர் கால்வாய் அந்த மின்கம்பம் வழியாக வந்தது. இதனால் மின்கம்பத்தை அகற்றிவிட்டு கால்வாயை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். ஆனால் மின்கம்பத்தை அகற்றாமல், கழிவுநீர் வாய்க்காலின் நடுவே மின்கம்பம் உள்ளவாறு கட்டப்பட்டது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே கழிவுநீர் வாய்க்காலின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் மாற்றி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story