ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது


ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது
x

ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஒடுக்கூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கவுசல்யா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருைடய உறவினர்கள் இலுப்பூரில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ், அங்கிருந்து கவுசல்யாவை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையை நோக்கி சென்றது. ஆம்புலன்சை பிரபுதேவா ஓட்டினார். அப்போது மேலூர் அருகே சென்றபோது கவுசல்யாவுக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். உடனே கவுசல்யாவுக்கு ஆம்புலன்சில் இருந்த அவசர கால மருத்துவர் பூபதிராஜா பிரசவம் பார்த்தார். இதில் கவுசல்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதைதொடர்ந்து தாயும், சேயும் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.


Next Story