கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி தப்பி ஓட்டம்
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி தப்பி ஓடிவிட்டார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் அனுமந்தநகரை சேர்ந்த 27 வயது கர்ப்பிணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த பெண் நேற்று மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கர்ப்பிணியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story