டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி விபத்து; டிரைவர் கைது

ஒரத்தநாடு அருகே டிராக்டர் மீது தனியார் பஸ் மோதி விபத்து; டிரைவர் கைது
தஞ்சாவூர்
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது47). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பஸ், டிராக்டரை முந்தி செல்ல முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் அசோக்குமார் காயம் அடைந்தார்.
மேலும் டிராக்டர், சாலையோரமாக ஒரு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரும் சேதம் அடைந்தது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் பேராவூரணி கழனிவாசல் பகுதியை சேர்ந்த இசைவீரசிங்கம் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story