கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53). தனியார் நிறுவன ஊழியர். இவர் சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றார். அங்கு விழா முடிந்ததும் தனியார் பஸ்சில் அவர்கள் சென்னைக்கு புறப்பட்டனர். உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் டீக்குடிப்பதற்காக டிரைவர் அங்கு பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய பழனிசாமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் பழனிசாமி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றளர்.
Related Tags :
Next Story