தனியார் நிறுவன ஊழியர் ஏரியில் பிணமாக கிடந்தார்
சோளிங்கரில் தனியார் நிறுவன ஊழியர் ஏரியில் பிணமாக கிடந்தார்.
சோளிங்கர் பெரிய ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பாதக சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரச அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்த பாலாஜி (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 25-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் ஏரியில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து பாலாஜியின் தந்தை சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் பாலாஜி சில இடங்களில் கடன் வாங்கியிருந்ததாகவும், அதன் காரணமாக இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.