21 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
21 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை நகர இந்து தமிழர் முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி தேசிய திருவிழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த ஒரு வார காலமாக பட்டுக்கோட்டை நகரத்தின் முக்கிய இடங்களில் 21 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு பட்டுக்கோட்டை நகராட்சி அண்ணா அரங்கு அருகில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. இதற்கு இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராமரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். பாலகுமார் வரவேற்றார். முன்னாள் நகர சபை தலைவர் ஜவகர் பாபு மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று வெண்டாக்கோட்டை நசுவினி ஆற்றில் 21 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. முடிவில் இந்து தமிழர் முன்னணி மாநிலக் குழு உறுப்பினர் சன்சிவா நன்றி கூறினார்.