கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்த சிறுவர், சிறுமிகள் ஊர்வலம்


கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்த சிறுவர், சிறுமிகள் ஊர்வலம்
x

தென்காசியில் கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்த சிறுவர், சிறுமிகள் ஊர்வலமாக சென்றனர்.

தென்காசி

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தென்காசியில் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் பொதுமக்களுடன் இணைந்து சிறுவர், சிறுமிகளின் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலின் ரத வீதிகளில் கிருஷ்ணர்-ராதை வேடம் அணிந்து நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலுக்குள் சென்று பஜனை நடத்தினர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.



Next Story