திண்டிவனத்தில்நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்


திண்டிவனத்தில்நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் நடந்தது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனத்தில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர் நல சங்கம் சார்பில் 4-ம் ஆண்டு ஸ்ரீவீரபத்திர சுவாமி வம்சவழி உடுக்கை, பம்பை, சிலம்பு கலை சங்க விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் மாநில தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைமை ஆலோசகர் கலைமாமணி பழனி, மாநில பொது செயலாளர் தங்கஜெயராஜ், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட செயலாளர் பெருமாள், பொருளாளர் மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், கருணாகரன், ஞானமூர்த்தி, சக்திவேல், குணசேகரன் உள்பட உடுக்கை, பம்பை, சிலம்பு கலைஞர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக உடுக்கை, பம்பை, சிலம்பம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் திண்டிவனம் திரவுபதியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட துர்க்கையம்மனுடன் இசை கருவிகளை இசைத்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஈஸ்வரன் கோவில் வரை சென்றனர்.


Next Story