மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊர்வலம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊர்வலம்
x

காரல் மார்க்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காரல் மார்க்ஸின் பிறந்த நாளை முன்னிட்டு செஞ்சட்டை ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

ஊர்வலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தொடங்கி அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பத்ரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்து பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசினர்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story