தொழில் துறையில் மாணவிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி


தொழில் துறையில் மாணவிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி
x

தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் தொழில் துறையில் மாணவிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

தொழில்துறையில் மாணவிகளை ஊக்கப்படும் விதமாக தமிழக அரசின் உதவியுடன் கூடிய நிகழ்ச்சி கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியின் நிலையான வளர்ச்சி மாணவ மையமும் இணைந்து நடத்தின. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவன தொடர்பு இயக்குனர் இர்பான் அஹமது வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் ரோசி பெர்னான்டோ, ராமேசுவரம் தோழி அலங்கார வடிவமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வானதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவிகளின் பல்வேறு படைப்புகளை பார்வையிட்டனர். .தமிழ்நாடு அரசின் உதவியுடன் கூடிய டி.என்.எஸ்.டி.எஸ்.எம். உறுப்பினர் தகுதி பெற்ற கல்லூரியாக தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி தேர்வு செய்யப்பட்டதை கலெக்டர் பாராட்டினார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதோடு மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.இறுதியாக இணையப் பாதுகாப்பு துறையின் 2-ம் ஆண்டு மாணவி ஆயிஷத் ருக்ஷானா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கீழக்கரை தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணை பொது மேலாளர் சேக் தாவூத் கான் மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள் செய்திருந்தனர்.


Next Story