பின்தங்கிய மாணவ-மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
பின்தங்கிய மாணவ-மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
நாகை வானவில் அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ- மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். வானவில் அறக்கட்டளை மேலாளர் சோலைராஜ், நிதி மேலாளர் வர்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோமட்சூ பன்னாட்டு நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்களை அதன் முதன்மை மேலாளர் கைலாஷ், உதவி மேலாளர் தில்லி பாபு ஆகியோர் வானவில் அறக்கட்டளை நிறுவனத்திற்கு வழங்கினர். பின்னர் கலெக்டர் பேசுகையில், இளம் வயதில் கல்வி முக்கியம். கிராமத்தில் பிறந்தாலும், சிறந்த கல்வியை ஆர்வமுடன் தொடர்ந்து கற்றதனால் தான் உயர்ந்த இடதுக்கு செல்ல முடியும். பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்வி ஒன்றே அழியாத செல்வம் என்பதை கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியை கற்பது ஒன்றே முக்கிய குறிக்கோளாக கொண்டு, பாடங்களை தொடர்ந்து கவனமாக படித்தால் உங்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக எளிதில் உருவாக்கி கொள்ளலாம் என்றார். இதில் 195 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.