"நெல்லை மேயரை மாற்றினால் போராட்டம் நடத்தப்படும்"-வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அறிவிப்பு
“நெல்லை மேயரை மாற்றினால் போராட்டம் நடத்தப்படும்” என வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.
"நெல்லை மேயரை மாற்றினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்" என்று வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அறிவித்து உள்ளது.
மேயர் விவகாரம்
பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் புல்லட் ராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மேயர் பதவி எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவியாகும். ஆட்சியில் எந்த கட்சி இருந்தாலும் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு தான் மேயர் பதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என்று சிலர் பேசி வருகிறார்கள்.
போராட்டம்
உள்கட்சி பிரச்சினை காரணமாக எங்கள் சமுதாயத்தை சேர்ந்த மேயரை மாற்றுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த பதவி மாற்று சமுதாயத்திற்கு கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வருகிறது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேயர் சரவணனை மாற்றினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். அவ்வாறு மாற்றினாலும் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவருக்கே அந்த பதவியை வழங்க வேண்டும். அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இதுகுறித்து முதல்-அமைச்சருக்கு மனு கொடுக்கவும் தயாராக உள்ளோம். மேயர் சர வணனுக்கு எங்கள் சமுதாயம் ஆதரவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, நெல்லை மாவட்ட மாணவரணி நிர்வாகி விக்னேஸ்வரன் மற்றும் ராஜா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.