ஸ்ரீவைகுண்டம் அருகே மலைப்பாம்பு பிடிபட்டது


ஸ்ரீவைகுண்டம் அருகே மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே தெனனஞ்சோலையில் மலைப்பாம்பு பிடிபட்டது.

தூத்துக்குடி


ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலையில் ஒரு சுவற்றின் ஓரத்தில் 10 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். தகவல் அறிந்ததும் வல்லநாடு வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். மலைப்பாம்பை பத்திரமாக பிடித்துச் சென்றனர். இதற்கிடையே செய்துங்கநல்லூரில் மருதூர் மேலக்கால்வாய் பகுதியில் மேலும் ஒரு பாம்பு கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் அந்த பாம்பையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக வல்லநாடு மலைப்பகுதியில் கொண்டு விட்டனர்.


Next Story