கழிப்பறையில் ஒட்டப்பட்ட 'கியூஆர்' கோடு
விருதுநகர் பழைய பஸ் நிலைய கழிப்பறையில் ‘கியூஆர்’ கோடு ஒட்டப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள நவீன கழிப்பறையில் பொதுமக்கள் குறைபாடுகளை பற்றி தெரிவிக்க தமிழக அரசின் கியூஆர் கோடு விளக்கக்குறிப்புடன் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன புகார்களை பற்றி தெரிவிக்கலாம் என்று விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ்நிலைய வளாகத்திலேயே சுகாதார அலுவலகம் உள்ள நிலையிலும் குறைபாடுகளை அவ்வப்போது நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த போதிலும் அதற்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கழிப்பறையில் கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது. இதற்காவது பலன் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Related Tags :
Next Story