மதுரை திருநகரில் ஒரே நாளில் 10 பேரை கடித்து குதறிய வெறிநாய்


மதுரை திருநகரில்  ஒரே நாளில் 10 பேரை கடித்து   குதறிய வெறிநாய்
x

மதுரை திருநகரில் நேற்று ஒரே நாளில் 10 பேரை வெறி நாய்கடித்து குதறியது.

மதுரை

திருப்பரங்குன்றம்,


மதுரை திருநகரில் நேற்று ஒரே நாளில் 10 பேரை வெறி நாய்கடித்து குதறியது.

நாய்கள் தொல்லை

மதுரை திருநகர் நெசவாளர் காலனியில் வெறிநாய்கள் மற்றும் தெருநாய்கள் அதிக அளவில் தெருக்களில் சுற்றி திரிகின்றன. இவைகள் தெருக்களில் செல்லும் பொதுமக்களை கடிக்க துரத்துவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி 94-வது வார்டு உதவி பொறியாளர் மற்றும் ஆய்வாளரை நேரில் சந்தித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை மனுகொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் எல்.கே.துளசிராம் தெரு மற்றும் பிள்ளையார்கோவில் தெருவில் சென்றவர்களை திடீரென்று ஒருவெறிநாய் துரத்தி, துரத்தி கடித்தது. வெறிநாய் துரத்துவதை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் தலைதெறிக்க ஓட்டம்பிடித்தனர்.

10 பேரை கடித்தது

இருப்பினும் அந்த வெறிநாய் அதே பகுதியை சேர்ந்த சாந்தாராம் (வயது 60), சாவித்திரி (58), ஆனந்த நித்யசூரி (18), காயத்ரி (65), ஆனந்தன் (16), கார்த்திக் (12), தேவிபிரியா (18) உள்பட 10 பேரை அடுத்தடுத்து கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

இதற்கிடையே அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு 10 பேரை கடித்து குதறிய அந்த வெறிநாயை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதுகுறித்து அறிந்த மாநகராட்சி கவுன்சிலர்ஸ்வேதா ஜெரால்டுசத்யன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர் மாநகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டரிடம் நேரடியாக தகவல் கூறி வெறிநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


Next Story