ஆறுமுகநேரியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்; பா.ஜனதா கோரிக்கை
ஆறுமுகநேரியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா ஓ.பி. சி. அணி மண்டல செயற்குழு கூட்டம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அணிதலைவர் தூசிமுத்து தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொது செயலாளர் சிவமுருகஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில், ஓ.பி.சி.அணி மாவட்ட பொதுச் செயலாளர் இ. தங்கபாண்டியன், மாவட்ட துணை தலைவர் கேசவன், நகர தலைவர் முருகேச பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் ஆறுமுகநேரியில்ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story