அரிய வகை வண்ண வவ்வால் பிடிபட்டது


அரிய வகை வண்ண வவ்வால் பிடிபட்டது
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளம் அருகே அரிய வகை வண்ண வவ்வால் பிடிபட்டது.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே அரிய வகை வண்ண வவ்வால் பிடிபட்டது.

தென்தாமரைகுளம் அருகே உள்ள கோம்பவிளையை சேர்ந்தவர் சுதாமதி. பறவைகள் இன ஆர்வலரும் கணக்கெடுப்பாளருமான இவர் தனது தென்னந்தோப்பில் இருந்து அழிந்து வரும் அரிய வகையை சேர்ந்த வவ்வால் ஒன்றை கண்டெடுத்தார். அது 'வண்ண வவ்வால்' என்று அழைக்கப்படும் அரியவகை இனத்தை சேர்ந்தது ஆகும். இந்த வவ்வாலின் உடல் முழுவதும் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் சுருள் முடியுடன் பஞ்சு போன்று மென்மையாகவும், அழகாகவும் காணப்பட்டது. இதனை அவர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து சுதாமதி கூறுகையில், 'இந்த அரிய வகை வவ்வால் 34 பற்களுடன், கூர்மையான சிறிய காதுகளை கொண்டுள்ளது. இந்த வவ்வாலுக்கு செவித்திறன் அதிகம். இது தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்படாத ஒரு அரிய உயிரினம். இந்த வகை வவ்வால் கேரளா, மேற்கு வங்காளம், இலங்கை, மாலத்தீவு மற்றும் ஆசிய பகுதிகளில் காணப்படுகிறது. இந்த வவ்வால் இனம் பூச்சிகளை மட்டுமே உண்பதால் இவை விவசாயிகளுக்கு நண்பனாக திகழ்கிறது' என்றார்.


Next Story