தண்ணீரின்றி பறக்க முடியாமல் தவித்த அரியவகை கழுகு...! வனத்துறையினர் மீட்டு சென்றனர்


தண்ணீரின்றி பறக்க முடியாமல் தவித்த அரியவகை கழுகு...! வனத்துறையினர் மீட்டு சென்றனர்
x

சாத்தான்குளம் அருகே பறக்க முடியாமல் தவித்த அரியவகை கழுகுகை வனத்துறையினர் மீட்டு சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியில் அரிய வகை பறவை ஒன்று பறக்க முடியாமல் தடுமாறி நின்றது. அதனை அப்பகுதியினர் மடக்கி பிடித்து மரநிழலில் கட்டிபோட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, அந்த பெரிய பறவை அரிய வகை கழுகு என்பது தெரியவந்தது. மேலும், உணவு எதுவும் அருந்த கிடைக்காததால் பலவீனம் அடைந்து பறக்க முடியாமல் தவித்துவந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனை அடுத்து கழுகுக்கு வனத்துறையினர் உணவு கொடுத்து தண்ணீர் குடிக்க வைத்தனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின் அந்த அரியவகை கழுகை கூண்டில் அடைத்து நெல்லை மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு அவர்கள் கொண்டு சென்றனர்.


Next Story