மகா சிவராத்திரி பூஜையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி


மகா சிவராத்திரி பூஜையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி
x

ஜோலார்பேட்டை அருகே மகா சிவராத்திரி பூஜையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் வி.எம் வட்டத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அப்போது சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி நடைபெறும். அதன்படி மகா சிவராத்திரியையொட்டி காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி, நந்திகேசவரருக்கு நான்கு கால பூஜை நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால பூஜை நடந்தது. இந்த பூஜையின்போது காசிவிசுவநாதர் மீது சூரிய ஒளி பட்டது. இதனை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காசி விஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபட்டதும் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். காலை 7.25 மணி முதல் 7.35 மணி வரை தொடர்ந்து 10 நிமிடம் இந்த காட்சி நீடித்தது. இந்த 10 நிமிடமும் சூரிய ஒளி கீழிருந்து மேல் நோக்கி சிவனை வணங்குவது போல் சிவன் மீது பட்டு சென்றது.

மேலும் வீரஆஞ்சநேயருக்கும் பூஜை செய்யப்பட்டது. கோமாதா பூஜையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எக்ஸெல் ஜி.குமரேசன், கோவை அன்பு ரைஸ் மில் உரிமையாளர் ராஜா மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர். நான்கு கால பூஜையில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story