பரமக்குடியில் அரிய வகை ஆந்தை
பரமக்குடியில் அரிய வகை ஆந்தை பிடிபட்டது
ராமநாதபுரம்
பரமக்குடி,
பரமக்குடி காமராஜர் நகர் நான்காவது தெருவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் அந்த கட்டிடத்திற்குள் பறவை கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பரமக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் அந்த கட்டிடத்திற்கு சென்று பறவையின் சத்தம் கேட்கும் இடத்தை தேடி அலைந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு கட்டிடத்தின் ஒரு ஓட்டைக்குள் பதுங்கி இருந்த அந்த பறவையை மீட்டனர். அது வெள்ளை நிற அரிய வகையை சேர்ந்த ஆந்தை என தெரியவந்தது. உடனே அவர்கள் அதை வனத்துறை அலுவலருக்கு தகவல் தெரிவித்து அவரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story