மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை ஆமை


மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை ஆமை
x

மீனவர் வலையில் அரிய வகை ஆமை சிக்கியது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் செந்தில் (வயது 40). நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இவரும் இவருடன், 2 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது இவர்கள் வலையை எடுக்கும்போது வலையில் அரிய வகை ஆமை ஒன்று சிக்கி இருப்பதை கண்டனர். உடனே இது குறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் வனத்துறை சரக அலுவலர் மேகலா தலைமையிலான வனக்காவலர்கள் விரைந்து வந்து ஆமையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த ஆமை அரிய வகையான பச்சை ஆமை என்று தெரியவந்தது. இந்த வகையான ஆமை இந்தப் பகுதியில் மட்டும் தான் காணப்படுகிறது என்று கூறப்படுகிறது. பின்னர் ஆமையை மீனவர்கள் மற்றும் வனத்துறையினர் மீண்டும் கடலில் பத்திரமாக விட்டனர். ஆமை வலையில் சிக்கியது அறிந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்து மீண்டும் கடலுக்குள் விட உறுதுணையாக இருந்த மீனவர்களுக்கு வனத்துறை சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story