சாலையில் இறந்து கிடந்த அரியவகை அணில்


சாலையில் இறந்து கிடந்த அரியவகை அணில்
x
தினத்தந்தி 18 March 2023 12:30 AM IST (Updated: 18 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் சாலையில் அரிய வகை அணில் இறந்து கிடந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் அரியவகை இனத்தை சேர்ந்த பறவை அணிகள் அதிக அளவில் உள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்த வகை அணில்களின் எண்ணிக்கை கொடைக்கானலில் அதிகரித்துள்ளதாக தெரியவந்தது. இந்த அணில்கள் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்துக்கு பறக்கும் தன்மை கொண்டது. இந்தநிலையில் கொடைக்கானல் ஆனந்தகிரி 4-வது தெருவில் பறவை அணில் ஒன்று சாலையில் காயத்துடன் இறந்து கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், அணிலின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த அணில் வாகனத்தில் அடிபட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story