கோத்தகிரி அருகே வீட்டின் குளியலறைக்குள் புகுந்த சாரைப்பாம்பு பிடிபட்டது
கோத்தகிரி அருகே வீட்டின் குளியலறைக்குள் புகுந்த சாரைப்பாம்பு பிடிபட்டது
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கட்டபெட்டு கிராமத்தில் உள்ள ராஜா என்பவரது வீட் டின் குளியலறைக்குள் நேற்று மாலை 5 மணியளவில், சுமார் 6 அடி நீள மஞ்சள் நிற சாரைப்பாம்பு ஒன்று புகுந்து பதுங்கிக் கொண்டது. குளியலறைக்குள் பாம்பு புகுந்தத்தைக் கண்டு அச்சம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள், அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் இதுகுறித்து கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 6 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து, சாக்குப் பையில் போட்டு, அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுச் சென்று விடுவித்தனர். வீட்டு குளியலறைக்குள் பாம்பு புகுந்ததால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story