முக்தீஸ்வரர் மீது விழுந்த சூரியகதிர்
முக்தீஸ்வரர் மீது சூரியகதிர் விழுந்தது.
மதுரை
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் சூரிய கதிர்கள் கருவறையில் உள்ள முக்தீஸ்வரரை தழுவி செல்லும். அதன்படி இந்த ஆண்டுக்கான நிகழ்வு நேற்று தொடங்கியது. அதன்படி வருகிற 23-ந் தேதி வரை காலை 6.45 மணி முதல் 7.15 மணி வரை சூரிய கதிர்கள் முக்தீஸ்வரர் மீது விழும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வை சூரியபகவான் தனது கதிர்களால் சிவபெருமானை வழிபாடு செய்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். நேற்று நடந்த இந்த நிகழ்வின்ே்பாது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் நமசிவாய நமசிவாய என்று பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
Related Tags :
Next Story