இந்துக்களை இழிவுபடுத்தி பேசிய ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;ஆரல்வாய்மொழி போலீசில் பா.ஜ.க.வினர் புகார்

இந்துக்களை இழிவுபடுத்தி பேசிய ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;ஆரல்வாய்மொழி போலீசில் பா.ஜ.க.வினர் புகார்
x

இந்துக்களை இழிவுபடுத்தி பேசிய ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரல்வாய்மொழி போலீசில் பா.ஜ.க.வினர் புகார் கொடுத்தனர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

இந்துக்களை இழிவுபடுத்தி பேசிய ஆ.ராசா எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரல்வாய்மொழி போலீசில் பா.ஜ.க.வினர் புகார் கொடுத்தனர்.

ஆ.ராசா மீது புகார்

முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்துக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இதனை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பா.ஜனதாவினர் புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் தோவாளை கிழக்கு ஒன்றிய பா.ஜ.க தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் மகாதேவன்பிள்ளை, மாதேவன் பிள்ளை, பொருளாளர் குகன், ஆரல்வாய்மொழி பா.ஜ.க. தலைவர் நரேந்திரகுமார் உட்பட ஏராளமான பா.ஜ.க.வினர் புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

சட்டப்படியான நடவடிக்கை

ஆ.ராசாவின் பேச்சு வேண்டுமென்றே இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பகைமையை தூண்டும் வகையிலும், அதன் மூலம் பொது அமைதியை சீர்கெடுக்கும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் பேசியுள்ளார். எனவே ஆ.ராசா எம்.பி. மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story