மாநில தொலைதூர ஓட்டப்போட்டியில் சாதனை படைத்தமாணவிக்குமார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பாராட்டு


மாநில தொலைதூர ஓட்டப்போட்டியில் சாதனை படைத்தமாணவிக்குமார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பாராட்டு
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாநில தொலைதூர ஓட்டப்போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி

விளாத்திகுளம்:

கன்னியாகுமரியில் கடந்த மாதம் 24-ந் தேதி 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான மாநில அளவிலான தொலைதூர ஓட்டப் போட்டி நடந்தது. இதில், புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவி கோகிலா கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். அவர் அசாம் மாநிலத்தில் ஜன.8-ந் தேதி நடைபெற உள்ள 57-வது தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார். சாதனை படைத்த மாணவி கோகிலாவை ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பாராட்டினார். மேலும், அவர் போட்டியில் பங்கேற்க அசாம் சென்று வருவதற்கு தனது சொந்த நிதியில் விமான டிக்கெட் மற்றும் ஊக்கத்தொகையையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராமசுப்பு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, விளாத்திகுளம்-வேம்பார் சாலையில் கழிவுநீர் மறுசுழற்சி நிலையம் அமைப்பதற்கான இடத்தையும், பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கழிவுகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் பணியையும் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுந்தரவேல், இளநிலை பொறியாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story