வட்டார அளவிலான கலை நிகழ்ச்சி


வட்டார அளவிலான கலை நிகழ்ச்சி
x

சோளிங்கரில் வட்டார அளவிலான கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

பள்ளி கல்வித்துறை சார்பில் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோளிங்கர் வட்டார பகுதிக்குட்பட்ட 33 அரசு பள்ளியை சேர்ந்த 700 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கவிதை, கட்டுரை, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

சோளிங்கர் நகரமன்ற உறுப்பினர் டி.கோபால், தொழிலதிபர் எஸ்.ஏ.கே.பழனி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story