வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் காமராஜர் நாட்டிய அடிக்கல்லை வைக்க கோரிக்கை


வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் காமராஜர் நாட்டிய அடிக்கல்லை வைக்க கோரிக்கை
x

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் காமராஜர் நாட்டிய அடிக்கல்லை வைக்க வேண்டும் என அவரது பேத்தி, நகராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் காமராஜா் நாட்டிய அடிக்கல்லை வைக்க கோரி காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளரும், காமராஜரின் பேத்தியுமான கமலிகா காமராஜா், நகர்மன்ற தலைவா் ராமலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தார். முன்னதாக நகராட்சி பாதுகாப்பில் இருந்த காமராஜா் நாட்டிய அடிக்கல்லை பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாநில செயலாளா் ஆலங்குளம் செல்வராஜ், மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் அப்துல்காதர், மாவட்ட துணை தலைவா்கள் ராம்மோகன், மேலநீலிதநல்லூர் மனோகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.


Next Story