ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல பாதை அமைத்து தர கோரிக்கை


ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல பாதை அமைத்து தர கோரிக்கை
x

ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல பாதை அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டியில் இருந்து அம்மாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல 10 கி.மீ. தூரம் உள்ளது. இடையில் 3 கி. மீ. தூரம் செல்ல வசதியாக தெற்கு காடு வழியாக பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பரத் ராஜா மாவட்ட நிர்வாகத்திடம் கோரியுள்ளார். விருதுநகர் நகராட்சி காலனியை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வாங்கிய இடத்திற்கு பட்டா மற்றும் பாதை இல்லாத நிலையில் உடனடியாக பட்டா வழங்கி பாதை அமைத்து தருமாறு கோரியுள்ளனர். விருதுநகர் நகராட்சி கவுன்சிலர் பிருந்தா கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், விருதுநகர் சாத்தூர் ரோட்டில் ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கான மயானம் பயன்பாட்டில் உள்ள நிலையில் இயற்கை பேரிடரால் சேதமடைந்த இந்த மயானத்தை சீரமைத்து தர வேண்டும் என கோரியுள்ளார். வத்திராயிருப்பு இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கூடலிங்கம் கொடுத்துள்ள மனுவில் சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரியுள்ளார்.


Next Story