ஓடையை சீரமைக்க கோரிக்கை
ஓடையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புலியூரான் ஊராட்சி தென்பாலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்கள் பருவ காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து அதன் மூலம் நெல் பயிரிட்டு வருவாய் பெற்று பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கண்மாயில் உள்ள மறுகால் ஓடை சீரமைக்கப்படாததாலும், தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததாலும் மழைகாலங்களில் மழைநீர் சேமிக்க முடியாமல் தண்ணீர் வீணாகி வருகிறது.
மழை காலங்களில் கண்மாய்களில் மழைநீர் சேமிக்க முடியாமல் விவசாய பணியும் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்பாலை கிராமத்தில் உள்ள கண்மாய்க்கரை மறுகால் ஓடை பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த கண்மாயை தூர்வாரி மறுகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என கூறினர்.