போதை மறுவாழ்வு மையத்தில் வசித்தவர் மர்ம சாவு; 6 பேர் தப்பி ஓட்டம்


போதை மறுவாழ்வு மையத்தில் வசித்தவர் மர்ம சாவு; 6 பேர் தப்பி ஓட்டம்
x

மதுரையில் போதை மறுவாழ்வு மையத்தில் வசித்தவர் அந்த மையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ேமலும் அந்த மையத்தில் இருந்து 6 பேர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மதுரை

மதுரையில் போதை மறுவாழ்வு மையத்தில் வசித்தவர் அந்த மையம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ேமலும் அந்த மையத்தில் இருந்து 6 பேர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஒருவர் மர்மசாவு

மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடியில் மதுவுக்கு அடிமையானவர்களுக்காக மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் திருமங்கலத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கருப்பையா (வயது 45) என்பவரும் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 6 பேர் தப்பி சென்று விட்டனர். கருப்பையா அந்த மையத்தின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மறுவாழ்வு மைய உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரிபவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மறுவாழ்வு மையத்தில் இருந்த வேல்முருகன், மணிகண்டன், ஹசன், மோகன், லோகேஷ், அலெக்சாண்டர் மற்றும் இறந்து கிடந்த கருப்பையா ஆகிய 7 பேர் அதிகாலை மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளனர். அதில் வேல்முருகன், மணிகண்டன், ஹசன் ஆகிய 3 பேர் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் மற்ற 3 பேர் இன்னும் அவர்களது வீட்டிற்கு செல்லவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மையத்தில் இருந்து தப்பி சென்ற கருப்பையா எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் இந்த மையம் அரசின் அனுமதி பெற்று தான் செயல்பட்டு வருகிறதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story