மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்கச்சென்ற ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி விபத்தில் சாவு


மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்கச்சென்ற ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி விபத்தில் சாவு
x

மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்கச்சென்ற ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி விபத்தில் உயிரிழந்தார்.

ஈரோடு

பெருந்துறை

மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்கச்சென்ற ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி விபத்தில் உயிரிழந்தார்.

மகளின் திருமண அழைப்பிதழ்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பங்களா வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 67). கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜோதிலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணம் ஆகி கோவையில் கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை கணேசன் வைத்துக்கொண்டு இருந்தார்.

கடந்த 30-ந் தேதி இரவு பெருந்துறையில் உள்ள ஈரோடு ரோட்டில் வசிக்கும் உறவினர் ஒருவர் வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார்.

ரோட்டில் விழுந்தார்

கணேசன் சென்று கொண்டு இருந்தபோது மூதாட்டி ஒருவர் ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். இதனால் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கணேசன் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை கணேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப் இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு வைக்க சென்ற ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி விபத்தில் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story