ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பதக்கம் வென்றார்
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பதக்கம் வென்றார்
மன்னார்குடி அசேஷம் பகுதியைச்சேர்ந்தவர் நடராஜன் (வயது 69). இவர் கடந்த 1978-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். உயரம் தாண்டுதல் வீரரான இவர் ஓய்வு பெற்றபின் மூத்தோருக்கான தடகளப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று 2012 முதல் பயிற்சி எடுத்து வருகிறார். கடந்த 7வருடங்களாக தேசிய அளவிலான தடகளப்போட்டியில் நடராஜன் பங்கு பெற்று வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கண்டிவாராவில் சமீபத்தில் நடைபெற்ற 42-வது தேசிய மூத்தோர் தேசிய தடகளப்போட்டியில் நடராஜன் கலந்துகொண்டார். இதில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 27 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். 69 வயதில் சாதனை படைத்த நடராஜனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.