கால்களை பதம்பார்க்கும் சாலை
கால்களை பதம்பார்க்கும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரெட்டியூர் பகுதியில் உள்ள 8-வது வார்டு குருமன்ஸ் வட்டத்தில் பஞ்சாயத்து சார்பாக பேவர் பிளாக் சாலை அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, இதுநாள் வரை சாலைப்பணி நடக்கவில்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் முதியோர், பெண்கள், சிறுவர், சிறுமிகளின் கால்களை ஜல்லிக்கற்கள் பதம் பார்க்கின்றன. வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுநாள் வரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. 3 மாதமாக கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story