கன்னங்குறிச்சியில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்


கன்னங்குறிச்சியில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
x

கன்னங்குறிச்சியில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தது.

சேலம்

கன்னங்குறிச்சி:

கன்னங்குறிச்சி தாமரை நகரில் வசித்து வருபவர் கார்த்தி (வயது 23), பனை மரம் ஏறும் தொழிலாளி. இவரும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வேல்கனி (19) என்பவரும் சென்னையில் நடந்த உறவினர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சந்தித்து உள்ளனர். அப்போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்ததும், இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடியின் பெற்றோரை போலீசார் அழைத்து சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.


Next Story