நெல்லிக்குப்பத்தில் கூரை வீடு எரிந்து சேதம்
நெல்லிக்குப்பத்தில் கூரை வீடு எரிந்து சேதமானது.
கடலூர்
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 38). சம்பவத்தன்று இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கூரை வீடு தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியே ஓடிவந்தார்.அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமானது.
இதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், 2 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ஆவணங்கள் முழுவதும் எரிந்து சேதமானது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story