அருமனை அருகே ரப்பர் தோட்ட காவலாளி தற்கொலை
அருமனை அருகே ரப்பர் தோட்ட காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை:
அருமனை அருகே ரப்பர் தோட்ட காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை அருகே உள்ள பத்துகாணி மருதவிளையைச் சோ்ந்தவர் சந்திரன் (வயது 55). இவர் தனியார் ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் ஏற்பட்ட தகராறில் இவருடைய மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் சென்றுவிட்டார். அதன் பின்னர் சந்திரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். 2-வது மனைவியும் பிரிந்து சென்றதால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆறுகாணி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.