புதர்களில் மறைந்த சுகாதார வளாகம்
புதர்களில் மறைந்த சுகாதார வளாகம் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தென் வன்னியர் வீதியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தச் சுகாதார வளாகத்திற்கு மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு எதுவும் ஏற்படுத்தப்படாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது இந்தக் கட்டிடம் முழுவதும் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அங்தக் கட்டிடம் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் சீமைக்கருவேல மரங்கள், செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்து கட்டிடத்தை முழுமையாக மறைத்து விட்டது. இந்தக் கட்டிடத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிதாக பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Related Tags :
Next Story