குப்பையில் கிடந்த மணிபர்சை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்


குப்பையில் கிடந்த மணிபர்சை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்
x

குப்பையில் கிடந்த மணிபர்சு

ஈரோடு

அந்தியூர் வார சந்தையில் பேரூராட்சி தூய்மை பணியாளர் கோபால் என்பவர் தூய்மை பணி செய்துகொண்டு இருந்தார். அப்போது குப்பையில் ஒரு மணிபர்ஸ் கிடந்தது. அதை எடுத்து கோபால் பிரித்து பார்த்தபோது உள்ளே செல்போன், ஏ.டி.எம். கார்டு, மோட்டார்சைக்கிள் சாவி ஆகியவை இருந்தது.

கோபால் உடனே மணிபர்சை அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிம் கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்க சொன்னார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மணிபர்ஸ் அந்தியூர் அருகே உள்ள தங்கபாளையத்தை சேர்ந்த கீதா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து கீதாவை போலீஸ்நிலையம் வரச்சொல்வி மணிபர்ஸ் ஒப்படைக்கப்பட்டது. மேலும் நேர்மையாக மணிபர்சை ஒப்படைத்த தூய்மை பணியாளர் கோபாலை போலீசார் பாராட்டினார்கள். கீதா நன்றி கூறினார்.


Next Story