ரூ.19½ லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடம்


ரூ.19½ லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரசுரெட்டிப்பாளையத்தில் ரூ.19½ லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரத்தை அடுத்த பரசுரெட்டிப்பாளையம் கிராமத்தில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். விழாவில் கண்டமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன், ஒன்றியக்குழு தலைவர் வாசன், ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story